search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில் சேவை"

    • செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது.
    • கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில் சேவை உள்ளன. அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில்கள் இடம் பெற்றுள்ளன.

    அதிகாலை 3.55 மணிக்கு தொடங்கும் சேவை நள்ளிரவு 1 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 24 மணி நேரத்தில் 3 மணி நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் முழுவதும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 4 வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மின்சார ரெயில்களின் சேவை மாற்றி அமைத்து ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணை வெளியிடுகிறது. நேரம் மாற்றம், கூடுதல் ரெயில் சேவை போன்றவை இதில் முக்கியமாக இடம் பெறும்.

    ஆனால் இந்த முறை மின்சார ரெயில்களின் சேவை குறைத்து அட்டவணை வெளியிட்டுள்ளது. 4 வழித்தடங்களிலும் சேவைகள் சற்று குறைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் தற்போது 8 சேவை குறைக்கப்பட்டு 116 சேவை இன்று முதல் செயல்பட்டிற்கு வந்தது.

    கடற்கரை நிலையத்தில் அதிகாலை 3.55 மணி முதல் சேவை தொடங்குகிறது. இந்த ரெயில் தாம்பரத்திற்கு அதிகாலை 4.50 மணிக்கு செல்கிறது. இரவு 11.59 மணிக்கு கடைசி சேவையாக புறப்படும் மின்சார ரெயில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.54 மணிக்கு செல்கிறது.

    இதே போல செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது.

    கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரெயில் சேவையும் 9 குறைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 70 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 61 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. முன்பு இந்த சேவை 80 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 70 ஆக குறைக்கப்பட்டது.

    அதிகாலை 4.10 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்குகிறது. 4.55 மணிக்கு வேளச்சேரி சென்றடைகிறது. வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு புறப்படும் ரெயில் 5.50 மணிக்கு கடற்கரை வந்து சேரும்.

    இரவு 10.20 மணிக்கு கடைசி சேவையாக கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரிக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 11.35 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேரும். காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் நேரத்தில் 10 நிமிடத்திற்கு வீதம் ஒரு பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. சாதாரண நேரத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை உள்ளது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 128 மின்சார ரெயில்கள் இக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 124 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு முதல் சேவை ஆவடிக்கு தொடங்குகிறது. இந்த ரெயில் நள்ளிரவு 1.05 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது.

    அதே போல பட்டாபிராமில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 4.25 மணிக்கு வந்து சேரும். இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் ஆவடிக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு செல்லும். இதுவே கடைசி சேவையாகும்.

    இதே போல திருத்தணியில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் நள்ளிரவு 12.20 மணிக்கு மூர் மார்க்கெட் வந்து சேரும்.

    கடற்கரையில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் முதல் ரெயில் காலை 6.25 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து சேரும். இரவு 11.20 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

    இரவு 9.40 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும் ரெயில் மூர்மார்க் கெட்டுக்கு 11.45 மணிக்கு வந்து சேரும்.

    கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய அட்டவணைப்படி மொத்தம் 620 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு இருந்ததை விட சேவை சற்று முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது. கடைசி சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

    • பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    • கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

    * மூர் மார்க்கெட் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * மூர் மார்க்கெட் - ஆவடி இடையே இரவு 11.30 மற்றும் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * அரக்கோணம் - வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி சென்னை கடற்கரை மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - வேளச்சேரி இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 9-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×